கிழக்கு மாகாணத்தில் வைத்தியசாலை இல்லாத கிராமங்கள் உள்ளன.வீதிகள் இல்லாத கிராமங்கள் உள்ளன. ஆனால் பாடசாலை இல்லாத கிராமங்கள் கிழக்கு மாகாணத்தில் இல்லை என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சியைப் பூர்த்தி செய்துகொண்டுள்ள வேளையில் கிழக்கு மாகாணத்துக்கு வெளியே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை மீண்டும் கிழக்கு மாகாணத்திலேயே நியமிப்பதற்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தூர இடங்களிலும்கஸ்டப்பிரதேசங்களிலும் பாடசாலைகள் உள்ளன.எல்லாப்பகுதிகளிலும் மாணவர்கள் உள்ளனர்.அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வியை வழங்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
பெண்கள் கஸ்டப்பகுதி பாடசாலைகளுக்கு துணிந்துசென்று கடமையாற்றவேண்டும்.நியமனம் வழங்கப்பட்ட பாடசாலைகளுக்கு அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் செல்லவேண்டும்.யாரும் கல்வி அமைச்சு பக்கம் இடமாற்றம் போரி வரக்கூடாது.அவ்வாறு வந்தாலும் எந்தவிதான நடவடிக்கையும் எடுக்கப்படாது.பாரபட்டசமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
சில பகுதிகளில் போக்குவரத்து பிரச்சினைகள் உள்ளன.பொதுப்போக்குவரத்து இல்லாத பகுதிகளும் உள்ளன.எனினும் போக்குவரத்து இல்லையென்று சொல்லி அங்குள்ள பிள்ளைகளுக்கு கல்வி வழங்கமுடியாது என கூறமுடியாது.
கல்வியானது ஒரு சமூகத்தின் விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும் அடிப்படையான காரணியாகும்.கல்வியில்லாத எந்த சமூகமும் வளர்ச்சிப்போக்டை அடையமுடியாது.
ஆசிரியர்கள் தூரப்பிரதேசங்களிலும் கஸ்டப்பிரதேசங்களிலும் கல்வியை வளர்ப்பதற்கு அர்ப்பணிப்புமிக்க சேவையினை வழங்கவேண்டும்.
கிழக்கு மாகாணம் பொருளாதாரம்,ஆன்மீகம் என எந்தவிடயமானாலும் அது வளர்ச்சியடைவதற்கு தேவையான கல்வி அறிவை ஊட்டுவதற்கான தேவை ஆசிரியருக்கு உள்ளது.ஆசிரியர்கள் தங்கள் கடமையினை அர்ப்பணிப்புடன் விசுவாசத்துடனாற்றவேண்டும்.
ஆசிரியர்கள் தங்களது ஆற்றல்களை தொடர்ந்து வளர்க்கவேண்டும்.புதிய நவீன தொழில்நுட்பங்கள் ஊடாக கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
0 comments: