Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாரவூர்த்தி – இரண்டு வாகனங்களுடன் மோதி விபத்து சாரதி மயிரழையில் உயிர் தப்பினார்.

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் 05.11.2016 அன்று நள்ளிரவு 12.00 மணியளவில்பாரவூர்த்தி ஒன்று கொட்டகலை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறி மீதும், கார் மீதும்மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் மூன்று வாகனங்களும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
எனினும் பாரவூர்த்தியின் சாரதி மயிரிழையில் உயிர்  தப்பினார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை பகுதியிலிருந்து அட்டன் பகுதியினை நோக்கி சென்றுகொண்டிருந்த லொறி ஒன்றே இவ்வாறுவிபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளாகிய நேரத்தில் மோதுண்ட இரு வாகனங்களிலும் எவரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
சம்பவம் தொடர்பாக பாரவூர்த்தியின் சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளைமேற்கொண்டு வருவதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
IMG_4351IMG_4354IMG_4369IMG_4372

Post a Comment

0 Comments