15 வீத வற் வரி அதிகரிப்பு நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் தொலைபேசி அழைப்பு கட்டணங்களுக்கான வரிகள் 46 வீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது.
தொலைபேசி சேவை தொடர்பாடல் நிலையங்களுக்காக 2 வீத செஸ் வரியும் , 25 வீதம் தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் வரியும் , 2 வீதம் தேசத்தை கட்டியெழுப்பும் வரியும் மற்றும் 15 வீதம் வற் வரியும் அறவிடப்படவுள்ளது.
இதன்படி தொலைபேசி அழைப்புகளின் வெளிச்செல்லும் அழைப்புகளுக்காக நிமிடமொன்றுக்கு அறவிடப்படும் 25 வீத வரி 46 வீதம் வரை உயரவுள்ளது. இதற்கிணங்க 100 ரூபா ரீலோட் செய்தால் அவற்றில் 46 ரூபாவை வரியாக செலுத்த வேண்டியேற்படும் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments