யாழ். வலிகாமம் வடக்கில், கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினர் வசமிருந்த 450 ஏக்கர் காணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று உத்தியோகபூர்வமாக விடுவித்தார்.
வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து, நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களில் காணிகள் இல்லாதவர்களுக்காக, மாவிட்டபுரம் சீமெந்துத் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணிகளில், மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியின் கீழ், வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடுகளை கையளிக்கும் நிகழ்வு, மாவிட்டபுரத்தில், நடைபெற்றது.
இதன்போது, புதிதான நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகளையும், உரிய பயனாளர்களிடம், ஜனாதிபதி கையளித்தார். மேலும், இந்நிகழ்வின்போது, 450 ஏக்கர் காணிகளையும், ஜனாதிபதி விடுவித்தார்.
தையிட்டி, மயிலிட்டி, காங்கேசன்துறை தெற்கு, மத்தி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 450 ஏக்கர் நிலப்பரப்பே, இவ்வாறு விடுவிக்கப்பட்டது.
0 Comments