மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல பணிப்புரை விடுத்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 வரையான காலப்பகுதியில் சொத்துக்களின் விபரங்களை சமர்ப்பிக்க தவறியமைக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments