Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி இல் மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2016

அனைத்து பாடசாலைகளிலும் மாணவர் பாராளுமன்றங்களை அமைத்தல் வேண்டுமென்ற கல்வி அமைச்சின் பணிப்பிற்கேற்ப பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி இல் 11.11.2016 தேர்தல் நடாத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

150 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு தரம் 6 – 9 வரையுள்ள மாணவர்களில் இருந்து 60 உறுப்பினர்களையும் தரம் 10 – 13 மாணவர்களில் இருந்து 90 உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்காக இத் தேர்தல் இடம்பெற்றது.

காலை 8.15 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி மு.ப 11.15 மணிக்கு முடிவடைந்தது. பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 1,330 இவற்றில் 85.11 வீத வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது. மாணவர்கள் மிக அமைதியான முறையில் மிக நீண்ட வரிசைகளில் நின்று தமது வாக்குகளை பதிவு செய்து சென்றதனை காணக்கூடியதாக இருந்தது.

வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்னும் நிலையத்திற்கு வந்தடைந்ததும் மு.ப 11.25 மணிக்கு வாக்கு எண்னும் பணிகள் ஆரம்பமாகின. இதன்போது அளிக்கப்பட்டிருந்த 1,132 வாக்குகளில் எந்தவொரு வாக்கும் நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பி.ப 1.25 மணிக்கு வாக்கெண்னும் பணிகள் முடிவடைந்து பி.ப 1.30 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் நடவடிக்கைகளின் போது மாணவ முகவர்களும் கண்கானிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக திட்டமிடப்பட்டு மிகவும் நேர்த்தியான முறையில் அனைத்து தேர்தல் பணிகளும் செய்து முடிக்கப்பட்டமையைக் காணக்கூடியதாக இருந்தது.



































































































































Post a Comment

0 Comments