Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எமது அரசாங்கம் விரைவில் அமையும் : மகிந்த ராஜபக்‌ஷ

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஒன்றிணைந்த அரசாங்கம் அமைக்கும் காலம் தொலைவில் இல்லையெனவும் விரைவில் அந்த அரசாங்கம் அமையுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
இரத்தினப்புரி நகரில் நேற்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெயர் பலகைக்குள் உட்பட்டவர்கள் அல்ல நாம். நாம் சிறந்த கொள்கைகளை பின்பற்றுபவர்கள். இன்று சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக உருவான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை யானையின் பின்பக்கத்துக்குள் வைத்துள்ளார். இப்போ நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றார்கள். அன்று நாம் பாதுகாத்த சகலதையும் ஏலவிற்பனை செய்கின்றனர். இன்று இரத்தினப்புரியில் இரத்தினக்கல் கிடைத்தாலும் அதனை விற்க முடியாது. நாம் எதிர்க்கும் போது நாம் துரோகிகள் ஆகின்றோம். எம்மை மட்டுமன்றி அரச ஊழியர்களையும் இவர்கள் பழி வாங்குகின்றனர். இது தொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. சிறைச்சாலை , எப்.சீ.ஐ.டி , சீ.ஐ.டியை காட்டி அச்சுறுத்துகின்றனர்.
எவ்வாறாயினும் மக்கள் மீண்டும் கேட்கின்றனர். அவற்றை வழங்க நான் தயாராக இருக்கின்றேன்.
நாம் நாட்டை பார்த்துக்கொள்கிறோம். சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைப்போம். அன்று இந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைக்கும். அரசாங்க பக்கம் இப்போ இருப்பவர்கள் மீண்டும் எமது பக்கம் வருவர். அந்த காலம் தொலைவில் இல்லை. பாராளுமன்றத்தில் தலைகளை மாற்றுவது அவ்வாறு கடினமானது அல்லது. நீண்ட காலம் இதற்கு தேவையில்லை. இந்நிலையில் அமைச்சர்களின் பின்னால் சீ.ஐ.டியினர் போகின்றனர். அவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. எனது தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்படுகின்றது. ஆனால் நான் இரகசியமாக எதனையும் செய்பவர் அல்ல. என அவர் தெரிவித்துள்ளார்.14563299_1035657419885411_7593203468601442793_n14563316_1035658223218664_7469841670960569371_n

Post a Comment

0 Comments