Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிரதேச செயலகங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டியில் மட்டு.மாவட்ட செயலக அணி முதலிடம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அணி வெற்றிவாகை சூடியுள்ளது.
மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகி 16ஆம் 17ஆம் திகதிகளில் போட்டிகள் நடைபெற்றுவந்தன.
ஒன்பது பிரதேச செயலகங்களின் அணிகள் இந்த கிரிக்கட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றியதுடன் இறுதிப்போட்டிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியும் மண்முனைப்பற்று பிரதேச செயலக அணியும் தெரிவாகியிருந்தது.
நேற்ற செவ்வாய்க்கிழமை பிற்பகல் இறுதிப்போட்டி ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

Post a Comment

0 Comments