சர்வதேசப் பரீட்சைகளில் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் ஈஸ்ரன் இன்டநஷனல் கல்லூரியின் மற்றுமொரு அளப்பரிய சாதனைப் படைப்பு.
ஆங்கில போதனா மொழி மூலம் கல்வி பயிலும் செல்வி. ரம்ஜா டிரோன் எனும் மாணவி அண்மையில் நடைபெற்ற IGCSE (லண்டன் O/L) பரீட்சையில் தமிழ் பாடத்தில் சர்வதேச ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனையை நிலைநாட்டியமை எமது கல்லூரிக்கு மட்டுமல்லாது, மட்டக்களப்பு மாவட்டத்திற்கே பெருமை தேடித் தந்துள்ளது.
மற்றுமோர் அரியசாதனை:
கடந்த ஜுன் மாதம் Edexcel (UK) நிறுவகத்தினால் நடாத்தப்பட்ட 3, 4, 5, 7, 8ம் தர மாணவர்களுக்கான Progress பரீட்சையில் எமது கல்லூரி மாணவ மாணவிகள் திறம்படச் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 99 மாணவ மாணவிகள் தோற்றிய இப் பரீட்சையில் 24 A* (High Achievers), 17 Grand Achievers, 58 General Achievers புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமை வியத்தகு மாபெரும் சாதனையாகும்.
0 Comments