மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கூழாவடி இலக்கம் 08ஆம் குறுக்கு வீதி பகுதியை சேர்ந்த புண்ணியமூர்த்தி சத்திவேல் ( வயது 31) இரண்டு பிள்ளைகளின் தந்தையையே இவ்வாறு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .


0 Comments