Advertisement

Responsive Advertisement

புலமை பரிசில் பரீட்சையில் வடக்கு , கிழக்கு , மலையக மாணவர்கள் சாதனை

2016ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளுக்கு அமைவாக வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட தழிழ்ப்பாடசாலைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்ககையிலான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
195 புள்ளிகளை பெற்று வவுனியா இரம்பைக்குளம் அரசினர் மகா வித்தியாலய மாணவன் கேகுலதாசன் அபிசிகன் தமிழ் மொழி மூல மாணவர்களிடையே அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தையும் மற்றும் தமிழ் , சிங்கள மொழி மூல மாணவர்களிடையே இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளான்.
அத்துடன் 194 புள்ளிகளை பெற்று திருகோணமலை ஆர்.கே.எம்.ஶ்ரீ கோணேஸ்வர இந்து வித்தியாலய மாணவன் உதய ராஜன் கௌசீகன் மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவி உமா சங்கர் ஜயனி ஆகியோர் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல மாணாவர்களிடையே இரண்டாமிடத்தையும் தமிழ் , சிங்கள மாணவர்களிடையே மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மலையகத்திலும் இம்முறை அதிக புள்ளிகளை பெற்று மாணவர்கள் சித்தியடைந்திருப்பதாக மலையக கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்குமாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களவாஞ்சிக்குடியைச் சேர்ந்த பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலை மாணவன் தெய்வேந்திரன் அபிட்சன் 191 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
இதேவேளை மலையக தழிழ்மொழி பாடசாலைகளில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலிய சென்ஜோசம் ஆரம்ப வித்தியாலய மாணவி தேவராஜ் லதுசிகா 186 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாம் இத்தை பெற்றுள்ளார். இதே பாடசாலையைச் சேர்ந்த மாணவனானா வீரரவி சதுர்ஷன் 185 புள்ளிகளை பெற்ற நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
இந்த பாடசாலையிலிருந்து இந்த பரீட்சைக்கான 120 மாணவர்கள் தோற்றியதுடன் இவர்களுள் 21 பேர் சித்தியடைந்திருப்பதாக கல்லூரியின் அதிபர் திருமதி. எஸ்.வெலிங்டன் மலையகத்தில் மற்றுமோர் முக்கிய பாடசாலையான ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன் கிஷான் கனிஷ்கர் 185 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments