சமாதானத்திற்கான நோபல்பரிசிற்கா இவ்வருடம் சிரியாவில் குண்டுவீச்சில் சிக்கியவர்களை காப்பாற்றும்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வெள்ளைதலைக்கவசம் என்ற அமைப்பிற்கு வழங்கவேண்டும் என பிரிட்டனின் த கார்டியன் கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பொதுமக்கள் உள்ள இடங்களில் குண்டுவீச்சு நிகழும்போது வெள்ளை தலைகவசம் அணிந்தவர்கள் தாங்கள் பாதுகாப்பு தேடுவதற்கு பதில் குண்டுவீச்சு இடம்பெற்ற பகுதியை நோக்கி ஓடுகின்றனர்.வெறுங்கையால் இடிபாடுகளை தேடுகின்றனர். காயமடைந்து அச்சத்தின் பிடியில் சிக்கிய நிலையில் காணப்படும் உயிர்பிழைத்தவர்களை அவர்கள் மீட்குகின்றனர்.
இந்த மீட்பர்களை வைட்ஹெல்மட்கள் என அழைக்கப்படுகின்றனர் (வெள்ளை தலைகவசங்கள்) 3000 பேர் கொண்ட தொண்டர் படையணியிது. அவர்கள் முன்னர் ஆடைதைப்பவர்களாகவும், பொறியியலாளர்களாகவும்,மாணவர்களாவும் காணப்பட்டவர்கள்.
தற்போது அவர்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பாடசாலைகள் மீது கொத்துக்குண்டுகள், பரல்குண்டுகள், போன்றவை வீசப்படும்போது அதிலிருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வருடத்திற்கான சமாதான விருதை வழங்குவதற்கு நோபல் குழு தயாராகிவரும்வேளை அது இவர்கள் குறித்து தங்கள் கவனத்தை திருப்பவேண்டும்.
வெள்ளை தலைக்கவசங்களின் நடவடிக்கை மிகச்சிறியது போன்று தோன்றலாம் ஆனால் அவர்கள் மிகப்பெரும் விடயத்திற்கான குறியீடாக காணப்படுகின்றனர். காட்டுமிராண்டித்தனத்திற்கு மத்தியில் அவர்கள் வெளிப்படுத்தும் துணிச்சலும், எதிர்ப்புணர்வும் மிக முக்கியமானது என கார்டியன்தெரிவித்துள்ளது.
0 comments: