Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விபச்சார தொழில் குற்றச்சாட்டு –மட்டு.முன்னாள் மேயருக்கு விளக்கமறியல்

விபச்சார தொழில் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு பேருரையும் எதிர்வரும் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது திருமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள முன்னாள் முதல்வரின் வீட்டின் ஒரு பகுதியில் இருந்து இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேரும் அதனை நடாத்திவந்ததாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் முதல்வரும் அவரது கணவர் உட்பட ஒன்பதுபேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நடைபெற்றுவந்த விசாரணையின் அடிப்படையில் முன்னாள் முதல்வரின் கணவர் உட்பட ஐந்து பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை முன்னாள் முதல்வர் உட்பட மூன்று பெண்களும் ஒரு ஆணும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கினை விசாணைசெய்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா நான்கு பேரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.


Post a Comment

0 Comments