Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அனுமதிப்பத்திரம் இன்றி மண் ஏற்றிய வாகனங்கள் பொலிசாரால் கைப்பற்றல்

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மண் அனுமதிப்பத்திரம் இல்லாமலும் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறிய வகையிலும் மண் கொண்டுசெல்லப்பட்ட வாகனங்களை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சட்ட ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் இன்றி வெல்லாவெளி பகுதியில் இருந்து மண் ஏற்றிவந்த ட்ரக்டர் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பட்டிருப்பு பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இந்த ட்ரக்டரை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேபோன்று நேற்று சனிக்கிழமை அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறிய வகையில் மண் கொண்டுசென்ற இரண்டு கன்டர் வாகனங்களை வீதிப்பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கைப்பற்றியதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றும் இன்றும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மூவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
IMG_0162IMG_0163

Post a Comment

0 Comments