Home » » மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட, பற்றைக்காடுகளால் மூடப்பட்டிருந்த பாதை திறந்தது.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட, பற்றைக்காடுகளால் மூடப்பட்டிருந்த பாதை திறந்தது.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக்கான ஆதிகால பாதையானது நேற்று (25) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களின் அனுசரணையில் முழுநாள் சிரமதானம் செய்யப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,


கடந்த மாதம் திக்கோடை தும்பாலை மக்கள் சந்திப்பின் போது மக்கள் இப்பாதையின் முக்கியத்துவம் பற்றியும் கிராம குறைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடினர். இதன்பிரகாரம் 26 வருடங்களாக பற்றைக்காடுகளாக மூடப்பட்டு பாவனையற்று இருந்த பாதை நேற்று (25) முழுநாள் சிரமதானம் மூலம் இப்பாதை செப்பனிடப்பட்டிருக்கின்றது. 

இது குறித்து பிரதேச வாசிகள் 'தும்பாலைக்கான ஆதிகால பாதையாகும். 1990ம் ஆண்டு வன்செயலின் பின்னர் இப்பாதை பாவனையற்று போய்விட்டது. தற்போது இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் அனுசரiயில் செய்யப்பட்டமையானது மிகவும் பயனுள்ளதாக இனி அமையும் என்றும், புதிய கொங்றீட் பாதை பாதுக்கப்படும் ஆகவே இதுபோன்ற செயற்பாடுகளை மேலும் மக்களுக்குத் தேவை எனவும் நன்றியும் தெரிவித்தனர்."
















Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |