மட்டக்களப்பு -பதுளை வீதியூடாகப் பாலாமடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியும் பாலாமடுவிலிருந்து செங்கலடி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் ரக வாகனமும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த 04 பேரும் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்
0 comments: