இலங்கையில் உள்ள சிறுபான்மை சமுகங்களுக்கு தேசிய வாழ்க்கையில் சரியான இடம்கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் இன்று தெரிவித்திருக்கின்றார்.
இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ள சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் சம்பந்தனுடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.
“இலங்கையின் இன நெருக்கடியை எவ்வாறு தீர்க்கலாம் . சிறுபான்மை மக்களுக்கு இடையில் காணப்படுகின்ற சந்தேகங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் ஐ.நா. விஷேட அறிக்கையாளர் பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையிலேயே அவர் எதிர்க்கட்சித்தலைவர் தலைமையிலான எமது குழுவினரை இன்று சந்தித்திருந்தார்” என சந்திப்பின் இறுதியில் ஊடகவியலாளர்களிடம் சுமந்திரன் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, “புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்மூலமாக வெவ்வேறு மக்கள் கூட்டங்கள் வாழும் இந்த நாட்டில் ஒவ்வொருவரும் தங்களின் இறைமையை உபயோகிக்க கூடிய வண்ணமாக பேரினவாத ஆட்சியற்றதாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும். அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்” என விசேட அறிக்கையாளரை சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.
972, 1978ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்கள் பெரும்பான்மை சமுகத்தை மட்டும் மையமாக வைத்து தனிக்கட்சியொன்றால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்களாகும். தற்போது பிரதான கட்சிகள் கூட்டிணைந்து தேசிய அரசாங்கம் உருவாகப்பட்டுள்ளது. ஆதன் பின்னரே புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள. ஆதற்கு நாமும் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றோம். அந்த வகையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான அரசியவலமைப்பொன்று உருவாக்கப்படவேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகவுள்ளது எனவும் சம்பந்தன் தெரிவித்தார்
0 comments: