மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது தேவை என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கண்காணிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தினுள், 1982ம் ஆண்டு 58ம் இலக்க அதிகாரங்களை வழங்கும் (பிரதேச செயலாளர்கள்) சட்டத்தினை மிகவும் அர்த்தமுள்ள, பயனுள்ள மற்றும் செயற்றிறன் மிக்கமுறையில் பிரயோக்கிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஒப்படைத்தல் (பிரதேச செயலாளர்களுக்கு) (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்தினை அரசாங்கத்தின் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதன் பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது


0 Comments