5ஆம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் பாடசாலைகளுக்கு அவை விநியோகிக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலய பாடசாலைகளின் பெறுபேறுகளை இன்று காலை 9 மணிக்கு பின்னர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேரடியாக வந்து அதிபர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மற்றைய பாடசாலைகளுக்கான பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை யாரேனும் மாணவனின் புள்ளிகள் தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்றால் எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் அவரின் பாடசாலை அதிபரினூடாக அதற்கான விண்ணப்பத்தை அனுப்பி வைக்குமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.
0 Comments