சிரியா அரசபடையினரின் விமானதாக்குதலில் காயமடைந்த நிலையில் துடித்துக்கொண்டிருக்கும் சிறுமியின் காயங்களை ஆற்றுவதற்காக சேற்றுமண்ணை பயன்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.மருத்துவ வசதிகள் எதுவுமற்ற நிலையிலேயே இவ்வாறு காயங்களின் வேதனையை ஆற்றுவதற்காக சேற்றை பயன்படுத்தியுள்ளனர்.
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள பகுதியொன்றின் மீது சிரியாபடையினர் மேற்கொண்ட நேபாம் குண்டுதாக்குதலிற்கு பின்னர், அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுமி வலியால் துடிப்பதையும்,மக்கள் அந்த சிறுமியின் காயங்களிற்கு பான்டேஜ் அணிவிப்பதையும் சேற்றை பயன்படுத்தி காயங்களினால் ஏற்பட்ட வலியை தணிக்க முயல்வதையும் வீடியோக்களிலும், புகைப்படங்களிலும் காணமுடிகின்றது.
விமானக்குண்டுவீச்சிற்கு பின்னர் நேபாம் தாக்குதல்கள் இடம்பெற்றன என என மருத்துவர் ஓருவர் தெரிவித்துள்ளார்.
நேபாம்குண்டுவீச்சினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு எங்களிடம் மருந்துகள் இல்லை தண்ணீரை பயன்படுத்த முடியாது அதனால் அவர்கள் சேற்றினை பயன்படுத்துகின்றனர் என்றும் அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments