கிரிக்கெட் விளையாட்டில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக இதற்காக முன்வரும் பாடசாலைகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சுற்று பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணியினருக்கு விருதுகளை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
0 Comments