சர்வதேச நீர்வெறுப்பு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று வவுனயாவில் நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றது.
வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் செயற்பட்டு வரும் நீர் வெறுப்பு நோய் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், தாதிய பயிற்சிக்கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இவ் ஊர்வலமானது பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக ஆரம்பித்து வவுனியா நகரை சென்றடைந்து நிறைவுபெற்றிருந்தது.
0 comments: