இலங்கைத் தரச் சான்றிதழ் பெற்ற, மோட்டார் சைக்கிள்களுக்கான தலைக்கவசங்களை அணியும் நடைமுறையானது இன்று(01) முதல், அமுல்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்களால் ஏற்படும் மரணங்களைக் குறைத்துக் கொள்ளும் நோக்கத்தில், குறித்த இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று, நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்தார்.
‘இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டுமென, ஒரு வருடத்துக்கு முன்னரே, வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில் இடம்பெறும் விபத்துக்களால், ஒரு நாளைக்கு 7 அல்லது 8 மரணங்கள் சம்பவிக்கின்றன. ஆதலால், அந்தத் தலைக்கவசங்கள், உரிய தரங்களில் தயாரிக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்பது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறினார்.
இதன் பிரகாரம், இலங்கைத் தரநிர்ணய நிறுவனத்தின் அனுமதி பெறப்படாத தலைக்கவசங்களை விற்பனை செய்தல், தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், இன்று முதல், அவ்வனுமதி பெறாத தலைக்கவசங்களை விற்பனை செய்யும், விற்பனை நிலையங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த திலகரத்ன, அவ்வாறான தலைக்கவசப் பாவனையாளர்கள், தங்களது தலைக்கவசங்களை மாற்றிக்கொள்ள, குறிப்பிட்டதொரு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments