Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பான் கீ மூனுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்

உள்நாட்டு விவகாரத்தில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தலையீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று எதிர்ப்புப் போராட்டங்களில்  சிங்களத் தேசியவாத அமைப்புகள்  ஈடுபட்டன.
கொழும்பிலுள்ள ஐ.நா செயலகம் முன்பாக முதலாவது ஆர்ப்பாட்டம் நேற்றுக்காலை இடம்பெற்றது. ராவண பலய  அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொழும்பிலுள்ள ஐ.நா செயலகத்துக்கு பான் கீ மூனின் வாகன தொடரணி வந்து சேர்ந்ததும், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள், ஐ.நா வளாகத்துக்குள் நுழைய விடாமல்  காவல்துறையினர் தடுத்தனர்.
பின்னர்,  ஐ.நாவின் தலையீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மனுவொன்று ஐ.நா அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
அதேவேளை, கோட்டே தொடருந்து நிலையம் முன்பாகவும். ஐ.நா பொதுச்செயலரின் வருகைக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியினரால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Post a Comment

0 Comments