தகவல்களை அறிந்துகொள்ளும் சர்வதேச தினத்தை முன்னிட்டு கொழும்பில் சர்வதேச மாநாடு ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாடு 28ம் ,29ம் ஆகிய இரு தினங்களில் கொழும்பு ஜெயிக்கா கில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த சர்வதேச மாநாட்டிற்காக சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த தேசிய ரீதியிலான புத்தி ஜீவிகளுக்கும் ஊடக நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களும் கலந்து கொள்ள முடியும். அத்தோடு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோருக்கான இட ஒதுக்கீட்டினை பயன்படுத்திக் கொள்வதற்காக ஆகிய இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க www.news.lk , www.dgi.gov.lk இந்த மகாநாட்டில் பிராந்திய மற்றும் சர்வதேச தரத்திலான புத்தியீவிகளும் சுமார் 20 பேர் கலந்துகொள்ள இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக அரச தகவல் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலான் சூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
0 Comments