களுத்துறை வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதும்கம பிரதேசத்தில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக 15 வயதுடைய சிறுவன் ஒருவன் விக்கெட்டினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்ட குழுவினரிடையே ஏற்பட்ட முறுகல் நிலையை யடுத்தே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
மேலும் கொலை தொடர்பில் 14 வயதான மற்றொரு சிறுவன் ஒருவனைக் கைது செய்துள்ளதாகவும் சம்பவம் நேற்று பிற்பகல் 2.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடையில் இடம்பெற்றதாகவும் வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள் சிலர் இணைந்து திறந்த வெளியொன்றில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இதன் போது ஒரு கட்டத்தில், துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த்த வீரரை (தாக்குதலுக்கு உள்ளாகி இறந்த மாணவன்) நோக்கி வீசப்பட்ட பந்து மட்டையில் படாது விக்கட் காப்பாளரை சென்றடைந்துள்ளது. இந்த நிலையில் அந்த பந்தானது அகலப் பந்து (வைட் பந்து ) என துடுப்பாட்ட வீரர் கூறியுள்ளார்.
இதன் போது பந்து வீசிக்கொண்டிருந்த்த வீரரான 14 வயதுடைய மற்றொரு மாணவன் அதனை நிராகரித்துள்ளான்.
0 Comments