மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரின் பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தராக செயற்பட்ட மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சொத்து விபரங்களை வெளியிட தவறியமை தொடர்பிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர்; முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரதானி உள்ளிட்டவர்களின் வங்கி கணக்குகள், நிதி நிறுவனங்களில் காணப்படும் பண வைப்புகள் தொடர்பில் பரிசோதிக்க அனுமதி வழங்கமாறு பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் கோரியிருந்தனர்.
இதற்கமைய 32 வங்கிகள் மற்றும் 47 நிதி நிறுவனங்களில் பேணப்பட்ட அவர்களின் கணக்குகளை பரிசோதிக்க கொழும்பு பிரதான நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
0 Comments