வெள்ளவத்தை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்த அதன் முகாமையாளர் மற்றும் நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி பிரதேசத்தை சேர்ந்தவருடன், மற்றைய நான்கு பெண்கள், கண்டி, மாத்தளை மற்றும் கிரேன்பாஸ் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்கள், 33, 27 மற்றும் 24 வயதானவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரும் புதுக்கடை 3 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதுடன், வெள்ளவத்தை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
0 Comments