Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திரிபோஷா விநியோகம் நிறுத்தம்?

கர்ப்பிணி தாய்மார்கள் , பாலூட்டும் தாய்மார்கள் , நிறை குறைந்த குழந்தைகளுக்கு என வழங்கப்படும் திரிபோஷா மா விநியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திரிபோஷா உற்பத்தி தொழிற்சாலையில் திருத்த வேலைகள் இடம்பெறுவதாக தெரிவித்து பிரதான களஞ்சியசாலையிலிருந்து அவற்றை விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை குடும்ப நல சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதத்திலிருந்து திரிபோஷா விநியோகம் குறைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments