மாகாணசபைகளுக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிகார பகிர்வு தொடர்பான வரலாற்று முயற்சிகள் குறித்து அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிகையில் அதிகார பகிர்வு தொடர்பான எண்ணக்கருவை முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவே முன் வைத்தார். சமஷ்டி எண்ணக்கருவும் அவரால் முன்வைக்கப்பட்டதாகும். முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்க அதிகார பகிர்வை மேற்கொள்ள எடுத்த முயற்சிகளை இனவாத சக்திகள் சீர்குலைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்
0 Comments