மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சட்டவிரோதமான முறையில் வெளி மாவட்ட மாணவர்களுக்கு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்ற அனுமதி வழங்கிய அதிபர்கள் தொடர்பாக சீ.ஐ.டி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த மாணவர்களை அந்த மாகாணங்களில் பரீட்சை எழுத அனுமதிக்கும் போது பாடசாலை அதிபர்கள் பணம் அல்லது இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளனரா என விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இவ்வாறு வேறு மாகாண மாணவர்களுக்கு தனது பாடசாலையில் சட்டவிரோதமான முறையில் பரீட்சையில் தோற்ற அனுமதித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய அதிபர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 Comments