சவூதி அரேபியாவில் குற்றச்சாட்டொன்று தொடர்பாக கல்லால் அடித்துக் கொலை செய்வதற்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு பின்னர் அதனை 3 வருட சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்ணின் தண்டனைக்காலம் முடிவடைந்துள்ளதாக அராபி நிவுஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அவருக்கு 2013ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் இறுதியில் அவரின் தண்டனைக்காலம் முடிவடைந்துள்ளதாகவும் தற்போது அவரை நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணமாகாத இலங்கையர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டே அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments