Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காணமற்போனவர்களை தேடுவது இன்னமும் இலங்கையில் ஆபத்தான முயற்சியாகவுள்ளது- IPS

உள்நாட்டு யுத்தத்தின் போது காணமற்போன ஆயிரக்கணக்கானவர்களை தேடும் பணியை இலங்கை ஆரம்பிக்கவுள்ள இந்த தருணத்தில், காணமற்போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் பணி இன்னமும் ஆபத்தானதாக உள்ளதாகவும் தாங்கள் அச்சுறுத்தல்களையும், மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
பாராளுமன்றம் சட்டமூலத்தை நிறைவேற்றியதை தொடர்ந்து அரசாங்கம் காணமற்போனவர்கள் குறித்த அவுவலகத்தை ஓக்டோபரில் ஏற்படுத்தும். இலங்கையில் இவ்வாறான அலுவலகம் ஓன்று அமைக்கப்படுவது இதுவே முதற்தடவை, இந்த அலுவலகம் நாடாளவிய ரீதியில் காணமற்போனவர்களை தேடும் பணிகளை ஓருங்கிணைக்கும்.
இதேவேளை காணமற்போகச்சசெய்யப்பட்டவர்களை தேடிக்கண்டுபிடிப்பதற்கான அவுலகத்தை கொண்டுள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கம் உள்நாட்டு யுத்தத்தின்போது காணமற்போகச்செய்யப்பட்டவர்களை கண்டுபிடிப்பது இன்னமும் கடினமான விடயமாகவுள்ளது என தெரிவித்தது.
இது மிகப்பெரும் பிரச்சினை என செஞ்சிலுவை சங்க அதிகாரியொருவர் தெரிவித்தார்.காணமற்போனவர்களின் குடும்பத்தவர்களை தொடர்புகொண்டதற்காக  தான் மூன்று மணித்தியாலங்கள் இலங்கை படையினரால் தடுத்துவைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து எனக்கு காணமற்போகச்செய்யப்பட்ட ஓருவர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் ஓன்று விடுக்கப்பட்டது, உறவினர்கள் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தனர்,எனக்கோ அல்லது அந்த குடும்பத்திற்கோ அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் என்பது தெரியாது,நான் அந்தவீட்டிற்கு சென்ற வேளை வீட்டிற்கு வெளியே இராணுவத்தினர் காணப்பட்டனர்,என தெரிவித்த பெயர் குறிப்பிடவிரும்பாhத அந்த அதிகாரி, பின்னர் தான் யார் என எதற்காக விபரங்களை சேகரிக்கின்றார் என படையினரால் விசாரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
காணமற்போகச்செய்யப்பட்டவர்களை விசாhரணை செய்வதற்கான அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய திட்டம் எதுவும் இல்லை,மேலும் படையினரும் இதனை அனுமதிக்கமாட்டார்கள், முன்னர் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் பெருமளவு படையினர் நிலைகொண்டுள்ளதால் அங்குகாணமற்போனவர்களை தேடுவது கடினமான விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை நல்லிணக்கப்பொறிமுறையை ஓருங்கிணைப்பதற்கான அலுவலகமும்,மற்றும் தேசிய ஐக்கியம் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகிய இரண்டும் காணமற்போனோர் தொடர்பான அலுவலகம் ஏற்படுத்தப்பட்டதும்  அரசாங்கம் தேடிக்கண்டுபிடிப்பதற்கான திட்டமொன்றை அறிவிக்கும் என தெரிவிக்கின்றன.குறிப்பிட்ட அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தின் நகல்வடிவில் சாட்சி மற்றும் பாதிக்கப்பட்டவர்களிற்கான பாதுகாப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்களின் பின்னர் காணமற்போனவர்கள் விவகாரம் என்பது சர்ச்சைக்குரியதாகவே காணப்படுகின்றது,2013 இல் ஏற்படுத்தப்பட்ட காணமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 20000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன, இதில் படையினரின் குடும்பத்தவர்களிடமிருந்து கிடைத்த 5000 முறைப்பாடுகளும் காணப்படுகின்றன.
சர்வதே செஞ்சிலுவை குழுவிற்கு 1989 ம்ஆண்டு முதல் காணமற்போனவர்கள் குறித்த 16000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன,2011ம் ஆண்டு ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு இலங்கையில் 40.000ற்கும் மேற்பட்டவர்கள் காணமற்போகச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. 2015 இல் மனித உரிமைகளிற்கான யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு தான் மேற்கொண்ட ஆய்வின் மூலம் 90,000ற்கும் மேற்பட்டவர்கள் காணமற்போயிருக்கலாம் என தெரிவித்தது.
பல வருட பிடிவாதத்திற்கு பின்னர் ராஜபக்ச அரசாங்கம் 2014 இல் காணமற்போனவர்கள் குடும்பத்தினர் தொடர்பாக நாடளாவிய ரீதியில்  ஆய்வினை மேற்கொள்வதற்கு  செஞ்சிலுவை குழுவிற்கு அதிகாரத்தை அளித்தது. கடந்த யூலையில் வெளியான இந்த ஆய்வறிக்கையில் காணமற்போனவர்களின் குடும்பத்தவர்கள் தங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது , எவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் காணமற்போனார்கள் என்பதை அறியவிரும்புகின்றனர் அதுவே அவர்களின் முக்கிய முன்னுரிமை என தெரிவித்;திருந்தது.
கண்டுபிடிப்பதற்கான பொறிமுறையை உருவாக்குவதில் அரசாங்கத்திற்கு உதவுவதாக செஞ்சிலுவை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், இது தொடர்பாக நாங்கள்முன்வைத்த யோசனைக்கு இலங்கை அரசாங்கம் சாதகமான விதத்தில் பதில்அளித்துள்ளது, என சர்வதேச செஞ்சிலுவை சங்க பேச்சாளர் சரசி விஜயரட்ண தெரிவித்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவை குழுவின் இலங்கை பிரிவு கடந்த மூன்று தசாப்தகாலமாக 25 மாவட்டங்களில் காணாமற்போனவர்களை கண்டுபிடிப்பதற்கான திட்;டத்தை முன்னெடுத்துவந்துள்ளது. எனினும் தற்போது புலப்பெயர்வு காணமற்போனவர்களை ஓன்றிணைப்பதை மாத்திரம் மேற்கொண்டுவருகின்றோம் என்கிறார் அந்த பிரிவின் தலைவர் கமல்யட்டவீர .
இதேவேளை அந்தபிரிவினர் தற்போது யுத்தத்தின் காரணமாக காணமல்போகச்செய்யப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லை,காணமற்போனவர்களின் குடும்பத்தவர்கள் கேட்டால் மாத்திரமே அதனை செய்கின்றோம் என்கிறது அந்த அமைப்பு.

Post a Comment

0 Comments