Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தயா மாஸ்டருக்கு பிணை


தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளராக இருந்த  தயா மாஸ்டர் இன்று  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச விரோத தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து அரசாங்கத்துக்கெதிராக செயற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்ட இவருக்கு பயங்கரவாத செயற்பாடுகளின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு என்பதனால் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி புதிய பிணை நிபந்தனையை வித்தித்திருந்தார்.
இந் நிலையில் ஒரு இலட்சம் ரூபாய் பொறுமதியான நான்கு அரச உத்தியோகத்தர்களை கொண்ட பிணையிலும் ஐந்து இலட்சம் ரூபாய் காசுப்பிணையிலும் செல்ல நீதிமன்றம் உத்திரவிட்டது.
இதேவேளை தயா மாஸ்டர் தினமும் யாழ். பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணியில் இருந்து 12 மணி வரைக்குள் கையொப்பமிட்வேண்டும் எனவும் வட மாகாணத்தை விட்டு செல்ல முடியாது என்ற நிபந்தனைகளும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments