தேர்தல்களின் போது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருவதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கட்சிக்குள் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது வெற்றிகரமாக அமையுமென கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்


0 Comments