Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிரித்தனியாவில் சமகாலத்தில் நிகழ்ந்த பல சடுதியான மாற்றங்கள் குறித்து பேசும் ஒரு படம்

பிரித்தானியாவின் கோர்ன்வால் என்ற இடத்தின் ஒரு கார் தரிப்பிடத்தில் போடப்பட்டுள்ள பயணிகளின் இருக்காய் ஒன்றில் அமர்ந்து சில வாரங்களுக்கு முன்னர் வரை பிரித்தானியாவின் மிகவும் சக்தி மிக்க நபராக இருந்த முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கடந்த செவ்வாய்க்கிழமை மீனும் உருளைக்கிழங்கு பொரியலும் சாப்பிட்டபோது எடுக்கப்பட்ட படம் இது.
எங்கோ தொலை தூரத்தை அவர் வெறித்து வெறித்துப் பார்ப்பது போல இந்த படத்தில் அவர் காணப்படுகிறார். அருகில் அவரது மனைவி சமந்தா இருக்கிறார்.ஆனால் அவரது முகத்தை அவருக்கு முன்பாக எழுந்து நிற்கும் ஒரு பெண்மணி மறைக்கிறார்.
கமரூன் பிரதமராக இருந்தபோது அவர் எங்கு சென்றாலும் உதவியாளர்களும் , பெரும் எண்ணிக்கையான ஊடகவியலாளர்களும் புகைப்படப்பிடிப்பாளர்களும் அவரை தொடர்ந்து சென்றுகொண்டிருந்தநிலையில் கடந்த செவ்வாயன்று எவரும் கவனிப்பாரற்ற நிலையில் கமரூன் அமர்ந்திருக்கிறார்.
இந்த படத்தை பிரசுரித்துள்ள பிரித்தானியாவின் டெய்லி நியூஸ் பத்திரிகை, இந்த கோடை காலத்தில் நிகழ்ந்த நாடகம், ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா பிரிவதுதொடர்பில் நடைபெற்ற சர்வசனவாக்கெடுப்பின் பின்னர் எதிர்க்கலாம் தொடர்பில் சடுதியாக இடம்பெற்ற பல மாற்றங்கள் மற்றும் பிரித்தானியாவின் அரசியல் முறைமையின் இரக்கமற்ற தன்மை போன்ற பல விடயங்களை இந்த படம் பேசவில்லையா ? என்று எழுதியிருக்கிறது.

Post a Comment

0 Comments