Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு தாழங்குடா ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய சக்தி விழா

மட்டக்களப்பு, தாழங்குடா-01 சேனைத்தெரு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது 2016.08.13 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி 2016.08.18 ஆம் திகதி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இச் சடங்கு நிகழ்வில் முதலாவதாக மண்முனைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குடபவனி ஊர்வலம் இடம் பெற்று, யாக பூஜையுடன் திருவிழா ஆரம்பமானது.

இத் திருவிழாக் காலங்களில் தோரணம் எடுத்து வரும் நிகழ்வு குடிமக்களால் நிகழ்த்தப்பட்டதுடன், வீரகம்பம் எடுத்து வருதல், அம்மன் வீதி ஊர்வலம் என்பன இடம் பெற்றது.



விஷேடமாக அம்பாளுடைய தீ மிதிப்பு நிகழ்வானது 2016.08.17 அன்று புதன் கிழமை பக்த அடியார்கள் பலர் கலந்து கொள்ள வெகு விமர்சையாக நடைபெற்றதுடன், இறுதியாக பள்ளையச் சடங்கு, தீர்த்தோற்சவத்துடன் இனிது நிறைவடைந்தது.










Post a Comment

0 Comments