மடுவில் இருந்து பெரிய மடு ஊடாக கிளிநொச்சிக்கு முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தினர் காட்டு யானைகள் மத்தியில் மாட்டிக்கொண்டனர்.
எனினும், பெரிய மடுவை சேர்ந்த இளைஞர்களின் உதவியுடன் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக குறித்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முச்சக்கர வண்டி பெரிய மடுவை அண்மித்த போது, முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதனை சீர்செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது எதிர்பாராத விதமாக காட்டு யானைகள் கூட்டமாக, முச்சக்கர வண்டியை நோக்கி படையெடுத்தது. இதனை அவதானித்த அவர்கள் பெரிய மடுவை அண்மித்த பகுதியை நோக்கி ஓட்டமெடுத்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்தை கேள்வியுற்ற அப்பகுதி இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முச்சக்கர வண்டியை சீர்செய்து அந்த குடும்பத்தை கிளிநொச்சி அனுப்பி வைத்துள்ளனர்.
0 Comments