ஆஸி அணியினர் 47.2ஓவர்களுக்கு 206ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்துள்ளது. இலங்கை அணியினர் 82 ஓட்டங்களால் வெற்றி.
289 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை..
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு 289 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினர் 48.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணி சார்ப்பில் அதிகபட்ச ஓட்டங்களாக குசல் மெண்டீஸ் 67 ஒட்டங்களையும் , தினேஸ் சந்திமால் 48 ஓட்டங்களையும் , ஏன்ஜலோ மெத்தீவ்ஸ் 57 ஓட்டங்களையும் மற்றும் குசல் ஜனித் பெரேரா 54 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் மிச்சல் ஸ்டார்க் , ஜேம்ஸ் போல்க்னர் மற்றும் எடம் ஷம்பா ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments