Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கு இலவச செயலமர்வு

காவத்தை பிரதேசத்திலிருந்து தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கு இலவச செயலமர்வு, காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுகிழமை காலை 8.30 மணி முதல் பி.ப 2.00 மணிவரை நடைபெற்றது.
 காவத்தை பிரதேசத்திலிருந்து தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி காவத்தை ஓபாத்த விக்ணேஷ்வரா தமிழ் வித்தியாலய ஆசிரியர் டி.கோபியன்,  வருடா வருடம் மேற்படி இலவச செயலமர்வை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச்செயலமர்வில் காவத்தை பிரதேசத்திலிருந்து தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள 300க்கும் அதிகமான மாணவர்கள் இதில் கலந்துகொண்டதாக ஆசிரியர் டி.கோபியன் தெரிவித்தார். fgh

Post a Comment

0 Comments