மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமத்திலே காடும் காடுசார்ந்த இடமுமாகிய முல்லை நிலப்பிரதேசத்திலே வீற்றிருந்து அருள் பாலிக்கும் தாந்தாமலை முருகன் ஆலயத்தின் இவ்வாண்டிற்கான விழா நிகழ்வுகள் தற்போது நடைபெற்றுவருகின்றது.
கடந்த மாதம் 30 ஆம் திகதி திருக்கதவானது திறக்கப்பட்டு இம்மாதம் 21ஆம் திகதி காலை 6 மணிக்கு தாந்தமலை முருகப்பெருமானின் தீர்த்தோட்சவப்பெருவிழா இனிதே நடைபெறவிருப்பதாக இவ்வாலயத்தின் திருவிழாக்காலத்தின் பிரதம குருவான ச.சி.கு.சச்சிதானந்த குருக்கள் தெரிவித்துள்ளார்.
இவ்வாலயத்தின் சிறப்புக்கள் மிகவும் மகத்தானது எனவும் முருகப்பெருமானின் அருள் வேண்டி இலட்சக்கணக்கான பக்கத அடியார்கள் திருவிழாக்காலங்களில் இவ்வாலயத்திற்கு வருகை தருவது வழமையானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments