Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

படுகொலையான சுவாதியின் கணவர் பிலால் மாலிக்கா ? : வெடித்தது புதிய சர்ச்சை

சுவாதிக்கும் பிலால் மாலிக்கும் திருமணம் நடந்துவிட்டதாக தமிழச்சி என்பவர் அவரது முகனூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதால் புதிய சர்ச்சை ஒன்று தற்போது வெடித்ததுள்ளது
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பட்டப்பகலில் சுவாதி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டான். அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சுவாதி படுகொலை வழக்கில் தொடர்புடைய ராம்குமாருக்கு போலீஸ் காவல் இன்றுடன் முடிந்தது. இதனையடுத்து இன்று அவனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதன் பின்னர்
அவன் எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
தொடர்ந்து அவனை வரும் 18 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்த நிலையில் தமிழச்சி என்பவர் அவரது முகனூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :-
‘கெளரவக் கொலை’ என்று ‘ஆணவக் கொலை’ நடத்தும் ‘சாதிப் புத்தி’ யின் வக்கீரம் பார்ப்பானுக்கு இருக்கக் கூடாதா?
சுவாதியின் படுகொலை செய்தி வெளியான தருணத்தில் அவரது பேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்ட போது ஒரு சினிமா காட்சியை சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். அதில் ஹீரோயின் சரிதா, ‪#‎இந்து‬ மதத்தை சேர்ந்தவர். ஹீரோ ‪#‎கிறிஸ்துவ_மதம்‬. சரிதாவை அவருடைய வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்துகிறார்.
டைனிங் டேபிளில் ஹீரோவின் அப்பா ‪#‎ப்ரேயர்‬ பண்ண சொல்கிறார். சரிதா இந்து மந்திரத்தை உச்சரிக்கிறார். அதிர்ச்சி அடைந்த ஹீரோவின் அப்பா ஒரு கட்டத்தில் ஹீரோவின் அப்பா சரிதாவை இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறச் சொல்கிறார். அன்று இரவு அவர்கள் வீட்டில் தங்கும் சரிதா அதை நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்கிறார்.
இந்தக் காட்சியை சுவாதி ஏன் பதிவு செய்திருக்கிறார்? என்ன நோக்கமாக இருக்கும் என்று அப்போது சந்தேகமாக இருந்தது (அந்த படத்தின் பெயர் தெரியவில்லை)
ஆனால் பத்திரிகையில் வெளிவராத செய்தி ஒன்று சுவாதிக்கு திருமணம் ஆகிவிட்டது. அது ‪#‎ரிஜிஸ்டர்_மேரேஜ்‬ என்றும் கூறுகிறது. அவர் கொல்லப்படும் போது ‪#‎நோம்பு‬ இருந்ததாகவும் கூறப்படுகிறது.
உடனே இந்த கொலையை சுவாதியின் கணவர்தான் செய்திருக்க வேண்டும் என்று முடிவுக்கு வருவதைவிட, இது ஏன் ஆணவக் கொலையாக இருக்கக் கூடாது என்கிற கோணத்தில் கவனிக்கத் தவறுகிறோமா? அல்லது தவிர்க்கிறோமா?
ஏற்கனவே திருமணமாக கதையை ஏன் சுவாதியின் பெற்றோர் மறைக்க வேண்டும்? அப்படியானால் சுவாதியின் பெற்றோருக்கும் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்று ஏன் காவல்துறையினர் விசாரிக்கக் கூடாது?
இன்று கொலை குற்றம் சாட்டப்பட்ட ‪#‎ராம்குமார்‬, ‘நான் சுவாதியை பார்த்தது கூட இல்லை’ என்று கதறி அழுகிறார்.
ராம்குமார் போன்ற ஏழை இளைஞர்களை ‪#‎மேட்டுக்குடி‬ மனநிலை கொண்ட சுவாதி போன்ற பெண்களுக்கு தன் கணவனாக நினைத்துக்கூட பார்க்க முடியாத தோற்றத்தை கொண்ட ராம்குமார்களை புறக்கணிக்கும் சமூகமே நம்முன் நிற்கிறது.
மேட்டுக்குடிகளுக்கு, ராம்குமார்களை கொலைக்காரன்களாக்க மாற்ற முயலும் அகங்காரத்தையும், ஆணவத்தையும், அதிகாரத் திமீரையும் பொருளாதாரமும் சாதியும் கொடுக்குமானால் அது சட்டத்திற்கு புறம்பான குற்றம் என்று வாதிட இன்னமும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்று தமிழச்சி அவரது முகனூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளார் .
சுவாதி படுகொலையான விவகாரம் தொடர்பாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஏற்கனவே அவரது முகநூல் பிலால் மாலிக் எனும் பெயரை பயன்படுத்தி பதிவிட்ட ஒரு பதிவு சமூக ஊடங்களில் வைரலாக பரவி சர்ச்சையை கிளப்பியது குறிப்பிட்டதக்கது .

Post a Comment

0 Comments