நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்காக நிதி மோசடி தொடர்பான விசாரணை பிரிவுக்கு சென்றிருந்த நிலையில் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து அவர் கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் திவிநெகும திணைக்களத்தின் நிதியை பயன்படுத்தி பிரதேச சபைகளுக்கு கொடிக்கம்பங்களுக்கு வழங்கவென இரும்பு குழாய்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடி குற்றச்சாட்டு தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 Comments