ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 3 வயதுடைய பாலகன் பரிதாபமாக பலியான சம்பவமொன்று மிஹிந்தலையில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் மிஹிந்தலை குமரசிறி கிராமத்திலுள்ள பலகனது வீட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எஸ்.எம். சடீவ் நுஹாஸ் ரஸ்மிஹா தம்பதிகளின் ஒரே மகனான 3 வயது பாலகனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த பாலகனின் தாயார் தோலுரிக்கப்பட்ட சில ரம்புட்டான் பழங்களை பாலகனுக்கு கொடுத்துள்ளனார். இந்நிலையில் அதிலொரு பழத்தின் விதை பாலகனின் தொண்டையில் சிக்கியுள்ளது.
பாலகன் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதை அவதானித்த தாயார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு பாலகனை எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் பாலகன் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை இடம்பெற்றதையடுத்து பாலகனின் சடலம் பெற்றோரிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாவது சம்பவம்
ரம்புட்டான் விதையொன்று தொண்டையில் சிக்கியதால் 11 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கம்புருபிடிய - லிக்கமுல்ல பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தை தனது தாத்தாவின் வீட்டில் இருந்த ரம்புட்டான் விதையொன்றை விழுங்கியமையினாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது , குறித்த ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதை தொடர்ந்து கம்புருபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» மிஹிந்தலை, லிக்கமுல்ல பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி இரு குழந்தைகள் பலி !
மிஹிந்தலை, லிக்கமுல்ல பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி இரு குழந்தைகள் பலி !
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: