அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவிதன்வெளியில் கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நாவிதன் வெளி 15ம் கொலனியில் தயாபரன் கெமிக்கல் ஸ்ரோர் உரிமையாளரின் லொறியே இவ்வாறு இன்று அதிகாலை 3.30 மணியளவில் எரியூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது.
வழமைபோன்று தொழிலை முடித்துவிட்டு அவரது கடைக்கு முன்னால் லொறியைநிறுத்திவிட்டு நித்திரைக்கு சென்றதாகவும் பின்னர் 3.30 மணியளவில் லொறிஎரிந்து கொண்டிருந்ததாகவும் பின்னர் அயலவர்களின் உதவியுடன் தீயை ஓரளவுகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடிந்ததாகவும் வாகனத்தின் முன்பகுதி முற்றுமுழுதாக எரிந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
எரியூட்டப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கலையரசனின் சகோதரனுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments