மட்டக்களப்பு நருக்கு செல்லும் கோட்டைமுனைப்பாலத்தில் இருந்து தற்கொலைக்கு முயற்சி செய்த ஒருவரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று மாலை 8.00மணியளவில் கோட்டைமுனைப்பாலத்தில் இருந்து ஒருவர் குதிப்பதைக்கண்டவர்கள் கூக்குரலிடவே அப்பகுதிக்கு வந்த பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து குறித்த நபரை மீட்டுள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக மதுபோதையில் இவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
0 Comments