இலங்கையின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இலங்கையில் நடைபெறும் அவுஸ்திரேலிய -இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்கான பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பணியாற்றியமை தொடர்பில் இலங்கை கிரிக்கட் சபை அவுஸ்திரேலிய கிரிக்கட் சபைக்கு முறையிட்டு முரளீதரண்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கும் நிலையில், அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் பணியில் இருந்து முரளீதரன் விலகியுள்ளார்.
இதனை சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகையை மேற்கோள் கட்டி இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இதனை இதனை அவுஸ்திரேலிய கிரிக்கட்டசபை உறுதி செய்துள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரிக்கட்டில் இருந்து முரளீதரனை வெளியேற்றுவதற்கு முன்னர் முயன்ற அவுஸ்திரேலிய அணிக்கு ஆலோசகராக முரளீதரன் பணியாற்ற சம்மதித்தமையை இலங்கை கிரிக்கட் சபை தலைவர் திலங்க சுமதிபால மற்றும் இலங்கை அணியின் முன்னாள் அமித் தலைவர் அர்ஜுனா ரணதுங்க ஆகியோர் கடுமையாக சாடி இருந்தனர்.
இதற்கு பதில் அளித்த முரளிதரன் ” நான் ஒரு துரோகி அல்ல. இலங்கை எனது சேவையை பயன்படுத்த முயலவில்லை. அதனால் எனது பங்களிப்பை மதிக்கும் அவுஸ்திரேலியாவுக்கு நான் உதவுகிறேன் ” என்று கூறி இருந்தார்.
இதேவேளை, முன்னாள் அமித் தலைவர்கள் மகேல ஜயவர்தன மற்றும் சங்கக்கார ஆகியோர் முரளிக்கு சார்பாக குரல் கொடுத்திருந்தனர்.
0 Comments