Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு பன்சேனை மாணவி சாதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் இராசலிங்கம் கஜந்தி எனும் மாணவி கிழக்கு மாகாண பாடசாலை மட்ட விளையாட்டில் நீளம் பாய்தல் போட்டியில் 1ம் இடத்தினை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.

குறித்த மாணவி கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மாகாண விளையாட்டு போட்டியில் மூன்று போட்டிகளில் பங்கேற்று இரண்டு போட்டிகளில் முதலிடத்தையும், ஒரு போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


வலயத்தின் பின்தங்கிய பிரதேசமாகவும், காட்டுப்பிரதேசமாகும், யானைகளின் தாக்குதலுக்கு அதிகமாக உள்ளாகும் பிரதேசமாக அமைந்திருந்தும் தனது திறமையால் கஜந்தி சாதனை படைத்துள்ளமை வரவேற்கத்தக்கது. 





Post a Comment

0 Comments