Advertisement

Responsive Advertisement

இருதய நோயாளர்களுக்கு இலவச உபகரணம்

இருதய நோயாளர்கள் பயன்படுத்தும் ஸ்டென்டிஸ் (இருதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நாளத்தில் ஏற்படும் தடைகளை நீக்க பயன்படுத்தும் உபகரணம்) உபகரணத்தை நோயர்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இருதய   நோயளர்கள் சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் போது இது வரை காலம் குறிப்பிட்ட உபகரணத்தை தனியார் மருந்தகங்களில் பணம் கொடுத்தே பெற்றுக்கொண்டனர்.
இதன்படி இவ்வாறாக நோயாளர்கள் பணம் கொடுத்து கொள்வனவு செய்யும் முறையை நிறுத்தி அவர்களுக்கு வைத்தியசாலைகளிலேயே இலவசமாக அந்த உபகரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு அமைச்சர் அந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த உபகரணத்திற்காக அரசாங்கம் வருடாந்தம் 1.2 பில்லியன் ஒதுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments