பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய தேசிய கொள்கைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிக்கப்படும் போது அதிகாரிகளையும் மற்றும் அரசியல்வாதிகளையும் நாடும் நிலைமை மாற்றப்பட வேண்டும். அதற்காக புதிய கொள்கைத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதன்படி நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் சிறந்த பாடசாலைகளாக மாற்ற வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. என அவர் தெரிவித்துள்ளார்
0 Comments